ஏ.சி.திருலோகச்சந்தரின் மலரும் நினைவுகள் புத்தகமானது

Bookmark and Share

ஏ.சி.திருலோகச்சந்தரின் மலரும் நினைவுகள் புத்தகமானது

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் வெற்றி பெற்ற கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்தவர் ஏ.சி.திருலோகச்சந்தர். 90 வயதை கடந்து விட்ட அவர், திரையுலகை விட்டு ஒதுங்கி வாழ்ந்து வருகிறார்.

அன்பே வா, வீரத்திருமகன், அதே கண்கள், நானும் ஒரு பெண், ராமு, தெய்வமகன், இருமலர்கள், பாரத விலாஸ், எங்க மாமா, டாக்டர் சிவா உள்பட காலத்தால் அழியாத பல காவியங்களை உருவாக்கியவர்.

இயக்குனர் எஸ்.பி.முத்துராமனையும், சிவகுமாரையும் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். அவர் தற்போது தனது திரைப்பட அனுபவங்களை, 'நெஞ்சம் நிறைந்த நினைவுகள்' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார்.

இதன் வெளியீட்டு விழா மயிலாப்பூரில் உள்ள மேனா திருமண மண்டபத்தில் நடந்தது. தொழிலதிபர் நல்லி குப்புசாமி வெளியிட ஏவிஎம்.சரவணன் பெற்றுக் கொண்டார். விழாவில் சிவகுமார், எஸ்.பி.முத்துராமன், வசந்தா பிரசுரம் சுவாமிநாதன், எஸ்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Post your comment

Related News
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions