கமர்ஷியல் இயக்குனர்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்த சிவா

Bookmark and Share

கமர்ஷியல் இயக்குனர்களின் பட்டியலில்  முக்கிய இடத்தைப் பிடித்த சிவா

சமீபகாலத்தில் எந்த ஒரு இயக்குனருக்கும் கிடைக்காத வாய்ப்பு இயக்குனர் சிவாவுக்குக் கிடைத்துள்ளது.

தொடர்ச்சியாக இரண்டு அஜித் படங்களை இயக்கி இரண்டு படங்களையும் வெற்றிப் படங்களாகவும் கொடுத்துவிட்டார். சிவா இயக்கிய முதல் படமான சிறுத்தையும் பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம். ஆக, தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைக் கொடுத்து ஹாட்ரிக் அடித்துவிட்டார் இயக்குனர் சிவா.

2002ம் ஆண்டு பிரபுதேவா, பிரபு நடித்து வெளிவந்த 'சார்லி சாப்ளின்' படம் மூலம் ஒளிப்பதிவாளராக திரையுலகத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சில தெலுங்குப் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தார். 2008ல் வெளிவந்த 'சௌர்யம்' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

2011ல் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான 'சிறுத்தை' மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். 2014 பொங்கலுக்கு வெளிவந்த 'வீரம்' படத்தில் அஜித்தை இயக்கியவர் மீண்டும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த 'வேதாளம்' படத்திலும் அஜித்தை இயக்கியுள்ளார். அவர் இயக்கிய முந்தைய படங்களைக் காட்டிலும் 'வேதாளம்' படம் தமிழ்த் திரையுலகில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

முன்னணி மாஸ் கமர்ஷியல் இயக்குனர்களின் பட்டியலில் இப்போது முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார் சிவா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions