மணிமண்டபம் கட்டக்கோரி சிவாஜி ரசிகர்கள் உண்ணாவிரதம்

Bookmark and Share

மணிமண்டபம் கட்டக்கோரி சிவாஜி ரசிகர்கள் உண்ணாவிரதம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதற்காக அடையார் சத்யா ஸ்டூடியோ அருகில் 36 கிரவுண்ட் நிலத்தை அரசு நடிகர் சங்கத்திடம் ஒப்படைத்தது. ஆனால் இதுவரை அங்கு மணிமண்டம் கட்டுவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.  

அரசு ஒதுக்கிய இடத்தில் சிவாஜி மணிமண்டபம் கட்டக்கோரி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நேற்று சிவாஜி சமூக நலப் பேரவையினர் உண்ணாவிரதம் இருந்தனர். பேரவையின் தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

இதில் காங்கிரஸ் செயலாளர் திருநாவுக்கரசர், தா.மா.க துணை தலைவர் ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  

மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ பீமாராவ் பேசும்போது "சிவாஜிக்கு மணிமண்டம் கட்ட சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர போராடுவேன்" என்றார். நடிகர் சங்க உறுப்பினர் பூச்சி முருகன் பேசும்போது "வருகிற நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெறும், அப்போது முதல் வேலையாக அவர், சிவாஜிக்கு மணி மண்டம் கட்டுவார்" என்றார். உண்ணாவிரதத்தில் ஏராளமான சிவாஜி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

 


Post your comment





Related News
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
நடிகர் திலகம் சிவாஜியை பெருமையடைய செய்த அறிவிப்பு- மகிழ்ச்சியில் திரையுலகம்
பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions