சிவாஜி வீட்டின் மூத்த மகன் நான்: கமல்ஹாசன் பேட்டி

Bookmark and Share

சிவாஜி வீட்டின் மூத்த மகன் நான்: கமல்ஹாசன் பேட்டி

விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்து, ஜி.என்.ஆர்.குமரவேலன் டைரக்ஷனில், எம்.பால விஸ்வநாதன் தயாரித்துள்ள படம், ‘வாகா.’

இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. கமல்ஹாசன் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட, டைரக்டர் மகேந்திரன் பெற்றுக் கொண்டார்.

விழாவில், கமல்ஹாசன் பேசியதாவது:-

‘‘தேவர் மகன் படத்தில், ‘‘விதை நான் போட்டது’’ என்று சிவாஜி சொல்வார். அந்த விதைகளில் ஒன்றுதான் நான். சின்ன வயதில் எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரையும் நான் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்...அவர் கள் மடியில் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம் என்ற நிலை இருந்தது.

எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் மிகப்பெரிய சாதனையாளர்கள், மிகப்பெரிய நடிகர்கள் என்பது அப்போது எனக்கு தெரியாது. போக் ரோடு வழியாக போகும்போது, நடிகர் திலகத்தின் ‘அன்னை இல்லம்’ வீட்டை வேடிக்கை பார்த்தவர்களில் நானும் ஒருவன். இந்த வீட்டுக்குள் போக முடியுமா? என்று ஏங்கியிருக்கிறேன்.

பிறகு அதே வீட்டில் எனக்கு அன்பும், ஆதரவும் கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன். அந்த வீட்டின் மூத்த மகன், நான். சிவாஜி ரசிகர்கள் கம்பீரமாகத்தான் நடப்பார்கள். அவருடைய மகன் பிரபுவும், பேரன் விக்ரம் பிரபுவும் இவ்வளவு பணிவாக இருப்பதை எண்ணி வியக்கிறேன். என் மகள் சுருதிக்கு விக்ரம் பிரபுவை காட்டி அறிவுரை சொல்ல நினைக்கிறேன்.

3 தலைமுறை நடிகர்களை உருவாக்கி இருக்கிறது, எங்கள் குடும்பம். நான் ஆசைப்பட்டபடியே ‘தேவர் மகன்’ படத்தில் நடிகர் திலகத்துடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் நடித்தது, என் பாக்கியம். அந்த படத்தில் நடித்தபோது, அவருக்கு எப்படி வசனம் சொல்லிக் கொடுப்பது? என்று தயங்கினேன். ஒரு நல்ல வசனம் எழுதி விட்டால், உடனே அவர் பாராட்டுவார்.

இது, என் குடும்ப விழா. இந்த விழாவுக்கு என்னை அழைக்காமல் விட்டு விடாதீர்கள் என்றேன். நான் வராமல் இருந்திருந்தால், ‘ஸ்கைப்’ வழியாக வாழ்த்தி இருப்பேன்.’’

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

விழாவில் நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, சக்திவேல் வாசு, கணேஷ் வெங்கட்ராம், அஜய் ரத்னம், நடிகை ரன்யா ராவ், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, துணைத்தலைவர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன், சிவாஜிகணேசனின் மகனும், பட அதிபருமான ராம்குமார், பட அதிபர்கள் தனஞ்செயன், கே.ராஜன், நந்தகோபால், டைரக்டர்கள் சசி, மகிழ்திருமேனி, ஆர்.கண்ணன், சீனுராமசாமி, கவுரவ், கணேஷ் வினாயக், இசையமைப்பாளர்கள் டி.இமான், விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

படத்தின் டைரக்டர் ஜி.என்.ஆர்.குமரவேலன் நன்றி கூறினார்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions