பொன் விழா கண்ட சிவாஜியின் சாந்தி!

Bookmark and Share

பொன் விழா கண்ட சிவாஜியின் சாந்தி!

நடிகர் திலகம் சிவாஜி நடித்த படம் சாந்தி. 1965ம் ஆண்டு மே 10ந் தேதி வெளிவந்தது. கடந்த 10 தேதி முதல் அதன் பொன்விழா ஆண்டு தொடங்குகிறது. சிவாஜி ரசிகர் மன்றம் சிறிய அளவில் ஒரு விழா நடத்தி பொன்விழாவை தொடங்கி வைத்துள்ளது.

ஆனால் தொடர்ந்து கொண்டாட யாரும் முன்வரவில்லை. சாந்தி படத்தை அன்றைய பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் தயாரித்திருந்தார். படத்துக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியது.

ஹீரோவும், ஹீரோயினும் கட்டிப்படித்து டூயட் பாடியற்காக ஏ சான்றிதழ் என்றது தணிக்கை குழு. ஆனால் தயரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் சாந்தி படத்தை அனைவரும் குடும்பத்தினருடன் பார்க்க வேண்டும் என்று கருதி. 12 நாட்கள் தணிக்கை குழுவுடன் போராடி யூ சான்றிதழுடன் வெளியிட்டார்.

இதனால் படம் 12 நாள் தாமதமாக வெளிவந்தது. எம்.ஆர்.ராதாவும், சிவாஜியும் இணைந்து நடித்த கடைசி படம் இது. படத்துக்காக தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் நவீன கேமராவை வாங்கி ஒளிப்பதிவாளருக்கு கொடுத்தார்.

பீம்சிங் இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜியுடன் தேவிகா, சி.என்.ராஜகுமாரி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.சாந்தியின் பொன்விழாவை பெரிதாக விழா எடுத்து கொண்டாடாவிட்டாலும் நினைவுபடுத்தும் விதமாக சம்பந்தப்பட்டவர்கள்  ஏதாவது செய்யலாமே என்று தவிக்கிறார்கள் சிவாஜி ரசிகர்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions