சிவாஜி பேரனின் பாஸ்போர்ட்டை முடக்க கோரி தீர்ப்பாயத்தில் வழக்கு

Bookmark and Share

சிவாஜி பேரனின் பாஸ்போர்ட்டை முடக்க கோரி தீர்ப்பாயத்தில் வழக்கு

வங்கியில் வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்தாத வழக்கில், நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகருமான விக்ரம் பிரபுவின் பாஸ்போர்ட்டை முடக்கக் கோரி, கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

சென்னை, கீழ்ப்பாக்கம், ரெக்ஸ் ரோட்டரி நிறுவனத்தில், பிரசாத், நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனும், நடிகருமான விக்ரம் பிரபு, பிரபுவின் அண்ணன் ராம்குமாரின் மனைவி கண்ணம்மா ஆகியோர், நிர்வாக இயக்குனராக உள்ளனர்.

இந்நிறுவனத்திற்கு, பர்க்ளேஸ் வங்கியில், 2012ல், 35 லட்சம் ரூபாய் கடன் பெறப்பட்டு, 10.31 லட்சம் ரூபாய் திரும்ப செலுத்தப்படவில்லை. நிலுவைத் தொகையை காலதாமதமின்றி செலுத்த வேண்டும் என, வங்கி மூலம் கடிதம் எழுதப்பட்டும் பதில் இல்லை.

வங்கியின் கடன் பாக்கிகளை வசூலிக்க, அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட, போனிக்ஸ் ஏ.ஆர்.சி., நிறுவனம் சார்பில், விக்ரம் பிரபுவின் நிறுவனத்திற்கு, நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை.

இந்நிலையால், கடன் பாக்கி தொகையை வசூலித்து தரும் படியும், அதுவரை, விக்ரம் பிரபு உட்பட, வழக்கில் சம்பந்தப்பட்ட, மூவரின் பாஸ்போர்ட்டையும் முடக்க வேண்டும் எனவும், சென்னையில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில், போனிக்ஸ் ஏ.ஆர்.சி., நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கில், மனுதாரர் தரப்பில், வழக்கறிஞர் முத்துகுமார் ஆஜரானார். வழக்கு விசாரணையை நீதிபதி ரவீந்திர போஸ், வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார். 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions