இன்று பாகுபலியின் சிவகாமி தரிசனம்

Bookmark and Share

இன்று பாகுபலியின் சிவகாமி தரிசனம்

இந்திய  திரை உலகமே ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் பாகுபலி படத்தின் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

இப்படத்தில், பாகுபலியாக பிரபாஸும், பல்லால தேவாக ராணாவும், தேவசேனாவாக அனுஷ்காவும், அவந்திகாவாக தமன்னாவும் சிவகாமியாக ரம்யா கிருஷ்ணனும் நடித்துள்ளனர்.

இவர்களுடன்   நாசர் போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர். இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்காவின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

இந்நிலையில் இன்று இப்படத்தில் சிவகாமியாக நடித்துள்ள ரம்யா கிருஷ்ணனின் புகைப்படம் வெளிவரும் என இயக்குநர் ராஜமௌலி  தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் இயக்குநர் ராஜமௌலி  கூறுகையில்,

இதுவரை பாகுபலி படத்தில் வெளியான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு  நன்றி, அடுத்து பாகுபலி படத்தில் சிவகாமியின் புகைப்படம் வெளியிடப்படவுள்ளது. சிவகாமியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions