வேலைக்காரன் படத்தின் போது சிவகார்த்திகேயனை மிரட்டிய தயாரிப்பாளர்கள் - அதிர்ச்சி தகவல்.!

Bookmark and Share

வேலைக்காரன் படத்தின் போது சிவகார்த்திகேயனை மிரட்டிய தயாரிப்பாளர்கள் - அதிர்ச்சி தகவல்.!

சாதாரண நடிகராக திரையுலகில் கால் பதித்த சிவகார்த்திகேயன் இன்று தன்னுடைய நடிப்பு திறமையால் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.

இவருடைய நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த வேலைக்காரன் படம் உலகம் முழுவது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் சமீபத்தில் அளித்த பேட்டியில் வேலைக்காரன் படத்தின் போது நடந்த பிரச்சனைகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

 நான் கொடுத்த சில கமிட்மென்ட்களால் முதல் நாள் ஷூட்டிங் நடந்த விடாமல் இரவு முழுவதும் கட்ட பஞ்சாயத்து நடந்தது என கூறியுள்ளார், மேலும் நான் கமிட்மென்ட் கொடுக்காத இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் படம் நடித்து கொடுக்க வேண்டுமென மிரட்டினார்கள் என தயாரிப்பாளர்களின் பெயரை கூறாமல் கூறியுள்ளார்.

 மேலும் தமிழ் சினிமாவில் ரெட் கார்டு என்ற பெயரில் கட்ட பஞ்சாயத்து அதிகம் நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions