காமெடி ஸ்பெஷலிஸ்ட் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?

Bookmark and Share

காமெடி ஸ்பெஷலிஸ்ட் இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருட இறுதியில் வெளிவந்த வேலைக்காரன் படம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றதால் அவரின் அடுத்தடுத்த படங்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா என பெயரிடப்பட்டுள்ள கிராமத்து கதையில் நடித்து வரும் அவர், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது எஸ்.எம்.எஸ் புகழ் இயக்குனர் ராஜேஷுடன் கைகோர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜேஷின் காமெடி படங்கள் அனைத்தும் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையே பெற்றுள்ளன என்பதால், சிவகார்த்திகேயன் படத்திற்கு இன்னும் அதிக எதிர்பார்ப்பு கூடும் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions