அப்பா, அண்ணன் போல் தட்டி கொடுத்தார் அஜித்: சிவகார்த்திகேயன் உருக்கம்!

Bookmark and Share

அப்பா, அண்ணன் போல் தட்டி கொடுத்தார் அஜித்: சிவகார்த்திகேயன் உருக்கம்!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் கதாநாயகர்கள் ஒருமுறையாவது அஜித்தை சந்தித்துவிட மாட்டோமா? அவரோடு நடித்துவிட மாட்டோமா? என்ற ஏக்கத்தில் இருக்கும் நிலையில் அந்த அதிர்ஷ்ட காற்று இப்போது சிவகார்த்திகேயன் பக்கம் வீசிள்ளது.

சமீபத்தில் அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். அஜித்தை சந்தித்து குறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது,“என்னுடைய வாழ்க்கையில் அஜித் சாரை சந்தித்து பேசியது முக்கியமான தருணம்.

எனக்கு அப்பாவோ, அண்ணனோ தட்டிக் கொடுத்து சொல்ல வேண்டிய விஷயங்களை அஜித் சொன்னார். அதைப்பற்றி வெளியே அதிகம் பேசாததற்கு காரணம், அதை விளம்பரமாக யாரும் நினைத்துவிடக் கூடாதுங்கிற கவலைதான். 

அந்த சந்திப்பில் சினிமா பற்றி குறைவாகத்தான் பேசினோம். என்னைப் பற்றி கேள்விப்பட்ட விஷயங்களை சொல்லி பாராட்டினார். ‘நீங்க இன்னும் பெருசா வரணும்’னு வாழ்த்தினார்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் எப்படி இருக்கவேண்டும்னு அஜித் சார் சொன்ன விஷயங்கள் பிரமிப்பாக இருந்தது. ஒரு அறிவுரையாக சொல்லாமல், அவரோட வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 

நிச்சயம் அது எனக்கொரு பாடம். அவர் சொன்ன விஷயங்களை கடைபிடித்தால் நான் உச்ச நடிகராக ஆகிறேனோ, இல்லையோ, நல்ல மனிதனாக ஆவேன். அவரை சந்திச்ச பிறகு நான் வேறொரு மாதிரியாக என்னையே பார்க்க ஆரம்பித்து விட்டேன். அவர் எனக்கு கொடுத்த நம்பிக்கை எனக்கு ரொம்ப பெரிய விஷயம்” என்றார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions