புகழ்பெற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்

Bookmark and Share

புகழ்பெற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்

வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படங்களும் வெற்றிப்பாதையின் வரிசையில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆர்.டி.ராஜாவின் ‘24ஏ.எம். ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் முதல் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இப்படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது.

சிவகார்த்திகேயனுடன் புகழ்பெற்ற தொழில்நுட்ப கலைஞர் பட்டாளம் இதில் களமிறங்குகிறது. இயக்குனர்கள் சுந்தர்.சி, அட்லீ ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய புதிய இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் காதலும் நகைசுவையும் கலந்த இப்படத்தின் கதை, திரைக்கதை வசனம் இயற்றி இயக்குகிறார்.

அவரது கதைக்கு உற்ற துணையாக ஒளிப்பதிவில் பி.சி.ஸ்ரீராம், இசைக்கு அனிருத், அரங்க அமைப்புக்கு டி.முத்துராஜ், படத்தொகுப்புக்கு ரூபன், ஒலி வடிவமைப்பாளர் ஆக ஆஸ்கார் விருதுப் பெற்ற ரசூல் பூக்குட்டி, சண்டை காட்சிகளுக்காக அனல் அரசு, சிறப்பு ஒப்பனையாளராக WETA நிறுவனத்தைச் சார்ந்த ஷான் ஃபுட்  ஆகியோர் பணியாற்ற இருக்கின்றனர். கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைப்பெற்று கொண்டு இருக்கிறது. 

இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா கூறுகையில், “ஒரு படத்தின் உன்னதமான தொழில்நுட்ப கலைஞர் குழு படத்தின் வெற்றியை பெரிதளவு தீர்மானிக்கிறது. எனது முதல் படத்தில் இத்தகைய பிரசித்திப் பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணி புரிவது எனக்கு மிக்க பெருமை. 

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அவர் இதுவரை ஏற்றிராத ஒரு புதிய பாத்திர படைப்பு. இந்த படம் அவரது கலை பயணத்தில் ஒரு முக்கிய படமாக இருக்கும். தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வைப் போலவே மற்ற நடிக நடிகையர் தேர்வும் மிக மிக பெரியதாக இருக்கும். காதலுக்கும், நகைசுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை” என்றார்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions