சிவகார்த்திகேயனின் திடீர் மாற்றம்!

Bookmark and Share

சிவகார்த்திகேயனின் திடீர் மாற்றம்!

சிவகார்த்திகேயனிடம் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு சீனியர் நடிகர்களே ஒரு கணம் அதிர்ச்சியடைகிறார்களாம். தனக்கு ஆரம்ப காலத்தில் வாய்ப்பு கொடுத்து, அவரை கைதூக்கிவிட்டவர்களை சட்டென உதறுவதில் சிவகார்த்திகேயனுக்கு நிகர் வேறு யாருமில்லை என்கிறார்கள்.

அவருக்கு முதல்பட வாய்ப்பைக் கொடுத்தவர் இயக்குநர் பாண்டிராஜ். சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு மெரீனா படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

மெரீனா படம் வெளிவருவதற்கு முன்னரே அவரது திறமையை கணித்து மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயனை ஸோலோ ஹீரோவாக்கியவர் இயக்குநர் எழில். பிறகு 3, எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களில் வாய்ப்பு கொடுத்ததோடு அல்லாமல் சிவகார்த்திகேயனை ஒரு ஸ்டாராக உருவாக்கியவர் தனுஷ்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே படங்களில் சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்தவர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன். பழைய கார் வைத்திருந்த சிவகார்த்திகேயனுக்கு புத்தம்புதிய ஆடி கார் பரிசளித்தார் மதன்.

இப்படியாக சிவகார்த்திகேயனுக்கு நட்சத்திர ஸ்தானம் கிடைக்கக் காரணமான பாண்டிராஜ், எழில், தனுஷ், எஸ்கேப் மதன் ஆகிய அத்தனை பேரையும் உதறித்தள்ளிவிட்டார். ஏறிய ஏணியை எட்டி உதைப்பது என்பது இதுதானா?


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions