கவுண்டமணியிடம் சான்ஸ் கேட்ட சிவகார்த்திகேயன்

Bookmark and Share

கவுண்டமணியிடம் சான்ஸ் கேட்ட சிவகார்த்திகேயன்

கவுண்டமணி சார்தான் எங்களைப் போன்ற பலருக்கு ரோல் மாடல். இப்போதும் அனைவராலும் விரும்பப்படும் நடிகர் அவர்தான். நான் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் நடித்த போது, சத்யராஜ் சாரிடம் கவுண்டமணி சார் சொன்ன கிண்டல் பேச்சை கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். இப்போது நினைத்தாலும் அவை சிரிப்பை வரவழைக்கும்.

அவரிடம் பேசும்போது, 'உங்களுடைய காமெடிகள் எங்களுக்குள்ளேயே இருக்கு தெரிஞ்சோ, தெரியாமலோ அதை திருடிக்கிட்டு தான் இருக்கோம்' என்றேன்.

அதற்கு கவுண்டமணி சார், 'அட... இல்லாதவங்க எடுத்துக்க வேண்டியதான்ப்பா' என்று சாதாரணமாக கிண்டல் அடித்தார். சத்யராஜ் சாரும், கவுண்டமணி சாரும் சேர்ந்து ஒரு படம் நடிக்க வேண்டும் முடிந்தால், அதில் எனக்கு ஒரு சான்ஸ் கொடுக்க வேண்டும். என்னுடைய ஆசை இதுதான்.  

'49 ஓ' அரசியல் கலந்த விவசாயம் பற்றிய படம் இதை காமெடி கலந்து சொல்ல கவுண்டமணி சாரால் மட்டும்தான் முடியும். அவரை மிஞ்ச இதுவரை யாரும் இல்லை. இனிமேலும் இல்லை. மீண்டும் திரைப்படத்தில் அவரை பார்க்கப்போகிறோம் என்ற சந்தோஷம் எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது.  

உங்களை சந்திக்க எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் சிவபாலனுக்கு நன்றி. நான் கவுண்டமணி சார் போல பேச வேண்டும் என்று கூட்டத்தில் இருந்து கேட்கிறார்கள். அப்படி பேசினால், அதுக்குத்தான் நான் இருக்கேன்னு, அவன் என்ன பேசுறது என்று கவுண்டமணி சார் சொல்லிடுவாரு' என்று கூறினார்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions