சிவகார்த்திகேயன் பட வசனத்தையும், ஹீரோயினையும் வளைத்துப்போட்ட விஷ்ணு விஷால்

Bookmark and Share

சிவகார்த்திகேயன் பட வசனத்தையும், ஹீரோயினையும் வளைத்துப்போட்ட விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தை தயாரித்து நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து ‘கதாநாயகன்’ என்ற படத்தையும் தயாரித்து நடித்து வருகிறார். இவருடைய தயாரிப்பில் மூன்றாவதாகவும் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த படத்தின் கதாநாயகியாக ரெஜினா கஸாண்ட்ரா நடித்து வருகிறார். இவர் ஏற்கெனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர். தற்போது சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த இன்னொரு நடிகையும் விஷ்ணு விஷாலின் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ‘மெரீனா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஓவியதான் விஷ்ணு விஷாலின் இந்த படத்திலும் நடிக்கவிருக்கிறார். அதேபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில்’ இடம்பெறும் வசனமான ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்பதை இப்படத்தின் தலைப்பாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

செல்லா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
வேலைக்காரன் படத்தை பற்றி தளபதி விஜய் சொன்ன வார்த்தை - புகைப்படம் உள்ளே.!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் பிரம்மாண்ட இசையமைப்பாளர் - ரசிகர்கள் குஷி.!
ஓவியாவின் நிலையால் அதிர்ச்சியான சிவகார்த்திகேயன்.!
விஜய், அஜித் பட சாதனைகளை ஓரம் கட்டிய சிவகார்த்திகேயன் - அதிர வைக்கும் வசூல் விவரம்.!
சென்னை பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் வேலைக்காரன் படத்தின் 11வது நாள் வசூல் விவரம்.!
இன்று அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோ பாடல் வெளிவருகிறதா ?
இந்த வருட டாப் 5 நடிகர், நடிகைகள் யார்? - அதிர்ச்சியூட்டும் கருத்து கணிப்பு முடிவு.!
புத்தாண்டை கொண்டாட சிவகார்த்திகேயன் செய்யும் வேலை - செம தகவல்.!
கர்நாடகாவில் கெத்து காட்டும் வேலைக்காரன் - மாஸான வசூல் நிலவரம் இதோ.!
வேலைக்காரன் படத்திற்கு அடித்த ஜாக்பாட் - மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions