பார்கோட் கிரிமினல்களை பிடிக்க தயாராகும் சிவகார்த்திகேயன் – ராஜா படத்தின் சுவாரஸ்ய கதை!

Bookmark and Share

பார்கோட் கிரிமினல்களை பிடிக்க தயாராகும் சிவகார்த்திகேயன் – ராஜா படத்தின் சுவாரஸ்ய கதை!

நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தை அடுத்து ‘தனி ஒருவன்’ ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இவர்களோடு பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், சினேகா, ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், பிரகாஷ் ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

இதன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியுள்ளது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியாகும் என தற்போதே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் போல் இல்லாமல் இந்த படம் முழுக்க முழுக்க சமூக அக்கறையை மனதில்கொண்டு எடுக்கப்படுகிறதாம். இதில் நாட்டுக்கு தேவையான பல நல்ல கருத்துக்கள் கமர்ஷியலாக சொல்லப்படுகிறதாம்.

இன்னும் தெளிவாக இப்படத்தின் கதையை சொல்லவேண்டும் என்றால், உலக அளவில் பொருட்களின் தரத்தை உணர்த்த பயன்படுத்தப்படும் பார்கோட் டெக்னாலஜியிலும் கிரிமினல்கள் புகுந்துவிட்டார்களாம். போலியில் பார்கோட்களை உருவாக்கி கம்யூட்டர் ஸ்கேனர்களே அதை நம்பும் வகையில் போலி பொருட்கள் தயாரித்து உலவவிடுவார்களாம்.

அப்படி போலி பார்கோட்களை உருவாக்கும் கிரிமினல்கள் பற்றிய கதை தான் இந்த படம் என தகவல் கசிந்துள்ளது. இதில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இருவரும் மெடிக்கல் ரெப்ரெசன்டேட்டிவாக நடிக்கிறார்களாம்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions