இனி சொந்தப்படம் மட்டுமே..! சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு!

Bookmark and Share

இனி சொந்தப்படம் மட்டுமே..! சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு!

காக்கி சட்டை படத்தை அடுத்து லிங்குசாமி தயாரிப்பில் ரஜினி முருகன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன் படத்தை அடுத்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.

லேட்டஸ்ட் தகவலின்படி.... இனி மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன். அதாவது இனி யாருக்கு படம் பண்ணுவதாக இருந்தாலும், ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் லைன் புரொடியூஸராக தானே அந்தப் படத்தை தயாரிப்பாராம் சிவகார்த்திகேயன்.

தான் தயாரித்த படத்தை எந்த தயாரிப்பாளர் அதிக தொகைக்கு கேட்கிறாரோ அவருக்கு விற்றுவிடுவாராம். பத்து படங்கள் கூட நடிக்கவில்லை.  அதற்குள் படத்தயாரிப்பு ஏன்? சிவகார்த்திகேயன் வட்டாரத்தில் விசாரித்தால்...

சில கோடி சம்பளத்தைக் கொடுத்து படம் தயாரிப்பவர்கள் மினிமம் 15 கோடி லாபம் சம்பாதிக்கிறார்கள். இதை பார்த்த பிறகே தானே படத்தைத் தயாரிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் சிவகார்த்திகேயன். அவரது இந்த முடிவு முன்னணி தயாரிப்பாளர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions