மதுரையில் பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

மதுரையில் பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயன்!

3 படத்தில் தனுஷும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடித்தார்கள்.  அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக தன்னுடைய வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலம் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக்கி எதிர்நீச்சல் படத்தைத் தயாரித்தார் தனுஷ்.

எதிர்நீச்சல் படம் சூப்பர் ஹிட்டாக... அதன் பிறகு வரிசையாக சிவகார்த்திகேயனுக்கு ஹிட் படங்களாக அமைந்தன. தற்போது தனுஷின் தயாரிப்பில் காக்கி சட்டை படத்தில் நடித்திருக்கிறார்.

தன்னை ஹீரோவாக்கிய நன்றியை மறக்காமல் எல்லா மேடைகளிலும் தனுஷ் பற்றிச் சொல்லி பெருமைப்படுபவர் சிவகார்த்திகேயன். தனுஷ் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் காக்கி சட்டை படம் வரும் 27ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இது ஒரு பக்கமிருக்க, கடந்த சில வாரங்களாக பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினிமுருகன் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது.

இன்னும் இரண்டு வாரங்களுக்கு மதுரையில் படப்பிடிப்பு பாக்கி உள்ளது. இந்நிலையில், நாளை (பிப்ரவரி 17 ஆம் தேதி) சிவகார்த்திகேயனின் பிறந்தநாள். மனைவி குழந்தையுடன் பிறந்தநாளை சென்னையில் கொண்டாட திட்டமிட்டிருந்தார்.

அதனால் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடும் என்பதால் மதுரையிலேயே தன் பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார் சிவகார்த்திகேயன். எனவே மனைவியையும் குழந்தையையும் மதுரைக்கு வரவழைக்கச் சொல்லிவிட்டாராம்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions