ஹேப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

ஹேப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன், கும்பகோணம் அருகே திருவீழிமிழலை என்னும் சிற்றூரில் பிறந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாகி இருக்கிறார்.

சினிமாவில் ஜொலிக்க பின்புலம் வேண்டும், கட்டுமஸ்தான உடல் வேண்டும், அழகு வேண்டும் என்ற ஏராளமான வேண்டும்களை உடைத்து எறிந்து இதோ இப்போது தானும் ஒரு சாக்லேட் பாயாக ஆக்‌ஷன் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

சினிமாவில் இரண்டரை மணி நேரத்தில் இடையில் வரும் ஒரே ஒரு பாடலில் சாதாரண நிலையில் இருந்து ஹீரோவாக உருவெடுப்பது போல் தோன்றினாலும் சிவகார்த்திகேயனை அப்படி எந்த பாடலும் மாற்றவில்லை. அவர் பட்ட பாடுகள் தான் மாற்றியுள்ளன.

''இந்த உயரம்ங்கறது இவனுக்கு அதிகம்னு சிலபேர் நினைக்கலாம். ஆனா இந்த உயரத்துக்கு வர்றதுக்கு கடின உழைப்பும், ஒழுக்கமும்,திறமையும்தான் காரணம். சம்பளம்லாம் எனக்கு பெரிய விஷயம் இல்லை. மிமிக்ரி பண்ணும்போது இங்கே இவ்வளவு பேமண்ட் தருவாங்ககறதுலாம் தெரியாது. நம்ப முடியாது. ஆனா கிடைக்கிற கைதட்டல்தான் என்னை பொறுத்தவரைக்கும் என்னோட பெரிய சம்பாத்தியம். இப்பவும் அப்படித்தான் தியேட்டர்ல ஆடியன்ஸ்கிட்டேருந்து வர்ற கைதட்டலும், விசிலும்தான் முக்கியமா படுது. இந்த சந்தோஷத்தையும், திருப்தியையும் எத்தனை கோடிகளாலயும் கொடுக்க முடியாது,'' என சிரிக்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவாவின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த ஒரு வழிகாட்டி. இதில் எங்குமே அறிவுரையையோ, போதனையையோ பார்க்க முடியாது. ஒரு சாதாரண சராசரி இளைஞன் எப்படி பிரபலம் ஆனான் என்பதை இன்ச் பை இன்சாக சொல்கிறது சிவாவின் வளர்ச்சி.

சிவா இன்னும் பெரிய பெரிய உயரங்களைக் கூட தொடுவார். அதற்காக இபோதே சொல்லிக்கொள்கிறோம். அட்வான்ஸ் கங்கிராட்ஸ்!

 


Post your comment





Related News
கஷ்டத்தில் இருக்கும் சிறுமியின் படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்- ஆனால் ஒரு கண்டீஷன்
வேலைக்காரன் என்ன தான் ஆனது?
அனிருத், சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த விருது- கலாய்த்த சதீஷ்
தமிழ் சினிமாவின் சிறந்த திரில்லர் படம் இதுதான்- சிவகார்த்திகேயன்
தன் அடுத்தப்படத்தின் குழப்பத்திற்கு முற்று புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் படத்தில் அம்மாவை மாற்றியது இதனால் தானா?சிவகார்த்திகேயன் படத்தில் அம்மாவை மாற்றியது இதனால் தானா?
சிவகார்த்திகேயனின் அடியாட்கள் ஷூட்டிங்கில் அட்டகாசம் செய்தார்களா?
சிவகார்த்திகேயன் தான் பெற்ற முதல் சம்பளத்தை என்ன செய்தார் தெரியுமா?
வளர்ந்து வரும் தொகுப்பாளரை மனம் திறந்து பாராட்டிய சிவகார்த்திகேயன்
ரஜினியின் ‘மன்னன்’ ஸ்டைலில் நடிக்கும் சிவகார்த்திகேயன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions