சிவகார்த்திகேயனின் ரெமோ-க்கு வரிவிலக்கு கிடைக்குமா?

Bookmark and Share

சிவகார்த்திகேயனின் ரெமோ-க்கு வரிவிலக்கு கிடைக்குமா?

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு நர்ஸ் அக்கா உட்பட பல தலைப்புகள் பரிசீலிக்கப்பட்டநிலையில் கடைசியில் ரெமோ என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

ரஜினிமுருகன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் முதல் மெட்ரோ ஸ்டேஷன் உட்பட சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ருதிஹாசன் நடிக்க மறுத்ததால் கடைசி சேரத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க முன்வந்தார். சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.  

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தை  சிவகார்த்திகேயனின்  நண்பரான ஆர்.டி.ராஜா தயாரிப்பதாக சொல்லப்பட்டாலும் உண்மையில்  சிவகார்த்திகேயன் தான் தயாரிப்பாளர் என்கிறார்கள்.

பெயரிடப்படாமலே  படத்தின் 75 சதவிகித படப்பிடிப்பு முடிவுற்றநிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு  ரெமோ என்ற படத்தின் பெயரை அறிவித்தனர். ரெமோ என்பது ஆங்கிலப் பெயர் என்பதால் இந்தப் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது. எனவே விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் கவலையடைந்துள்ளனர்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions