விஜய் டிவிக்காக நடித்துக் கொடுத்த சிவகார்த்திகேயன்

Bookmark and Share

விஜய் டிவிக்காக நடித்துக் கொடுத்த சிவகார்த்திகேயன்

இன்றைக்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன், விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாகத்தான் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அந்த நிகழ்ச்சியில் சாதாரண போட்டியாளராகக் கலந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வெளிப்படுத்தி அந்த நிகழ்ச்சியின் வின்னராகவும் வெற்றி பெற்றார். அதன் பின் அது இது எது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பணியை ஏற்று அவருடைய தனித் திறமையின் மூலம் அந்த நிகழ்ச்சியைப் பற்றி அதிகமாகவே பேச வைத்தார்.

அடுத்து படத்தில் ஒரு நண்பர் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி,  மெரினா படத்தில் நாயகனாக உயர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மாபெரும் வெற்றியாலும், தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்ததாலும் இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவருடைய ரஜினி முருகன் மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் விரைவில் வெளிவர உள்ளது.

தன்னை அறிமுகப்படுத்தியவர்களையும், வளர்த்து விட்டவர்களையும் மறக்கும் இந்தத் திரையுலகத்தில் தன்னை அறிமுகப்படுத்திய, வளர்த்து விட்ட விஜய் டிவியை மறக்காமல் அவர்களுக்காக ஒரு புதிய விஷயத்தை செய்து கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

விஜய் டிவியில் நாளை முதல் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி புதுப் பொலிவுடன் ஆரம்பமாக உள்ளது. தான் அறிமுகமான அந்த நிகழ்ச்சியை இப்போது பிரபலப்படுத்த அந்த நிகழ்ச்சியின் புரோமோவில் நடித்துக் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். 

டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்றவர்கள் மீண்டும் எக்காரணத்தைக் கொண்டும் அந்த டிவி பக்கம் போகவே மாட்டார்கள். ஆனாலும், சிவகார்த்திகேயன் நன்றி மறக்காமல் அந்த புரோமோவில் நடித்துக் கொடுத்ததை திரையுலகம் மட்டுமல்ல, டிவி உலகமும் ஆச்சரியத்துடன் பார்க்கிறது.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions