இனி நட்புக்காக நடிக்க மாட்டாராம் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

இனி நட்புக்காக நடிக்க மாட்டாராம் சிவகார்த்திகேயன்!

விஜய் டிவி.யில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனின் வாய்ஜாலத்துக்காகத்தான் அவரை 3 படத்தில் தனது ப்ரண்டாக நடிக்க வைத்தார் தனுஷ். ஆனால் அந்த படத்தில் நடித்துக்கெண்டிருந்தபோதே மெரினா படத்தில் அவரை ஹீரோவாக ஒப்பந்தம் செய்தார் பாண்டிராஜ்.

அதனால்தான் 3 படத்தில் பாதிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் கேரக்டர் காணாமல் போயிருந்தது. அந்தவகையில், மெரினா படத்தில் ஓரளவு நடித்திருந்த சிவகார்த்திகேயன், மனம் கொத்திப்பறவைக்கு பிறகு மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்காவில் விமலுடன் நடித்து தனது காமெடியான பர்பாமென்சினால் ஒரு இடத்தை பிடித்தவர், பின்னர் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் அழுத்தமாக கால்பதித்து விட்டார்.

ஆனால், ஆரம்பத்தில் இருந்தே நண்பர்களால் வளர்த்து விடப்பட்ட சிவகார்த்திகேயன், நட்புக்காகவே சில படங்களில் ஒப்பந்தமாகியும் வந்தார். அது எல்லாமே அவருக்கு சாதகமாகத்தான் அமைந்தன.

இருப்பினும் இனிமேல் அவர் நண்பர்களுக்காக எந்த படத்திலும் நடிக்கப்போவதில்லையாம். யாராக இருந்தாலும் கதை தனக்கு பிடித்தால் மட்டுமே ஒத்துக்கொள்வாராம். காரணம், இப்போது அவருக்கென குறிப்பிடத்தக்க ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்களாம்.

அவர்களெல்லாம், அஜீத், விஜய், சூர்யாவைப் போன்று இவரையும் ஒரு அதிரடியான மாஸ் ஹீரோவாக திரையில் பார்க்க வேண்டும் என்று தங்களது விருப்பங்களை அவருக்கு தெரியப்படுத்தி வருகிறார்களாம்.

அதனால் இனிமேல் ரசிகர்களுக்காக தன்னை அர்ப்பணிக்க திட்டமிட்டுள்ள சிவகார்த்திகேயன். அவர்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் உள்ள கதைகளுக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கப்போகிறாராம். மாறாக, நண்பர்கள் என்கிற முறையில் ரசிகர்களின் விருப்பத்துக்கு மாறான கதைகளில் ஒருபோதும் நடிக்கமாட்டாராம்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions