முதன்முறையாக பெண் வேடத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்?

Bookmark and Share

முதன்முறையாக பெண் வேடத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்த எந்தவித முயற்சியும் எடுக்க தயாராக இருப்பவர்கள் நடிகர் கமலும், விக்ரமும்தான். அவ்வை சண்முகி, தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் அவருடைய கதாபாத்திரத்திற்காக கமல் எடுத்துக்கொண்ட சிரத்தை அனைவருக்கும் தெரிந்ததே. அதேபோல், ‘ஐ’ படத்திற்காக விக்ரம் தனது உடல் எடையை குறைத்தும், கூட்டியும் நடித்தது அனைவரும் அறிந்ததுதான்.

கதாபாத்திரங்களுக்காக தங்களை தாங்களே வருத்திக்கொள்ளும் நடிகர்கள் வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் ஒரு படத்தில் பெண் வேடத்தில் நடிக்கப் போகிறாராம். அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ‘அவ்வை சண்முகி’ போன்ற கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

இந்த கதாபாத்திரத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு மேக்கப் போடுவதற்கு ஹாலிவுட்டில் ‘லார்ட் ஆப் தி ரிங்ஸ்’, ஷங்கரின் ‘ஐ’ ஆகிய படங்களுக்கு மேக்கப் பணியை மேற்கொண்ட சீன் புட் குழுவை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி இன்னும் தேர்வாகவில்லை.

இருப்பினும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கப் போகிறார் என்று பரவலாக பேச்சு அடிபடுகிறது. எதுவாக இருந்தாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரஜினிமுருகன்’ படத்தின் வெளியீட்டுக்கு பிறகு எல்லாம் தெளிவாகும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions