உலக மார்க்கெட்டையும் பிடிக்கும் சிவகார்த்திகேயன்...!

Bookmark and Share

உலக மார்க்கெட்டையும் பிடிக்கும் சிவகார்த்திகேயன்...!

சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள 'காக்கி சட்டை' வரும் 27ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளதாம்.

அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் இப்படம் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் படத்திற்கும் உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளதாக படத்தை வாங்கி வெளியிடும் வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

டிவியிலிருந்து வந்தாலும் சிவகார்த்திகேயனின் அப்போதைய டிவி நிகழ்ச்சிகளைக் கூட யு டியூபில் தேடிப் பார்த்து பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது என இணையதள வல்லுனர்களும் தெரிவிக்கிறார்கள்.

அந்தப் புகழ்தான் சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு வளரக் காரணமாக இருந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அமெரிக்கா, எமிரட்ஸ், சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து மற்றும் தமிழர்கள் பரவலாக வசிக்கும் பல நாடுகளிலும் தமிழ் சினிமாவின் சீனியர் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு உள்ளதோ அதே அளவிற்கு சிவகார்த்திகேயனுக்கும் இருக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதைக் கண்டு, அவருக்கே முன்பே திரையுலகில் ஹீரோவானவர்களே ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்களாம்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions