ரசிகர்களின் அன்புத்தொல்லையில் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

ரசிகர்களின் அன்புத்தொல்லையில் சிவகார்த்திகேயன்!

சமீபகாலமாக சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் அதிகரித்து விட்டனர். அதனால் அவரது படங்கள் வெளியாகும் சமயங்களில் அஜீத்-விஜய் ரசிகர்களைப்போலவே இவரது ரசிகர்களும் போஸ்டர், நோட்டீஸ் அடித்து ஒட்டுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதோடு, அவரது படங்களின் டீசர், ட்ரைலர்கள் இணையதளங்களில் வெளியாகும்போது லட்சக்கணக்கில் லைக் கொடுக்கிறார்கள். இதனால் சிவகார்த்திகேயனும் தற்போது மாஸ் ஹீரோவாகிக்கொண்டிருக்கிறார்.

அதோடு, அவர் அவுட்டோர்களுக்கு செல்லும்போது, ஒவ்வொரு ஏரியாக்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தை நோக்கி படையெடுக்கிறார்களாம். அவர்களெல்லாம் சிவகார்த்திகேயனுடன் நின்று போட்டோக்கள் எடுக்க வேண்டும் என்கிறார்களாம்.

அப்படி வருபவர்களில் ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாது பெண் ரசிகைகளும் இருக்கிறார்களாம். இப்படி இதுவரை தனக்கு இல்லாத வரவேற்பு இப்போது ரசிகர்களிடம் கிடைத்திருப்பதைப் பார்த்து ஒரு வகையில் சந்தோசமடைந்தாலும், படப்பிடிப்பு தளங்களுக்கே வந்து ரசிகர்கள் முற்றுகையிடுவதால் வருத்தமும் அடைகிறாராம் அவர்.

அதேசமயம், சில நாட்களில் தனக்கு நேரம் கிடைக்கும்போது ரசிகர்களுடன் நின்று போட்டோக்களுக்கும் போஸ் கொடுக்கிறாராம் சிவகார்த்திகேயன்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions