பூஜை அன்றே விற்பனையாகி விடும் சிவகார்த்திகேயன் படங்கள்!

Bookmark and Share

பூஜை அன்றே விற்பனையாகி விடும் சிவகார்த்திகேயன் படங்கள்!

ஒரு காலத்தில் படங்களின் பூஜை போடப்படும்போதே அந்த படங்களின் ஆடியோ விற்பனையாகி விடும். அப்படி விற்பனையாகும் ஆடியோவிற்கான தொகையை வைத்தே படத்தை முடித்து வந்தனர். ஆனால், சமீபகாலமாக ஆடியோவுக்கான மதிப்பு குறைந்து விட்டது.  

அதோடு, சில முக்கியத்துவம் வாய்ந்த முன்னணி ஹீரோக்களின் படங்களை தவிர மற்ற நடிகர்களின் படங்களை திரையில் போட்டு பார்த்த பிறகுதான் அதற்கான விலை பேசுகிறார்கள் விநியோகஸ்தர்கள்.

அதிலும் பெரும்பாலான படங்களை இப்போது படத்தை தயாரிப்பவர்களே ரிலீஸ் செய்யும் நிலைதான் உருவாகியிருக்கிறது. இந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் படங்களும் சில முன்னணி நடிகர்களின் படங்களைப்போன்று பூஜை அன்றே விற்பனையாகி விடுகிறதாம்.

அதுவும் தயாரிப்பாளர்கள் கேட்கிற தொகையைவிட அதிகமான தொகையை கொடுத்தே முன்பதிவு செய்து விடுகிறார்களாம் விநியோகஸ்தர்கள்.  

அதன்காரணமாகத்தான் காக்கி சட்டை எதிர்பார்த்தபடி வசூலிக்கவில்லை என்றபோதும், சிவகார்த்திகேயனின் சம்பளத்தில் எந்த தயாரிப்பாளரும் கைவைக்கவில்லையாம். மாறாக, அதற்கடுத்த படத்திலேயே பல லட்சங்களை உயர்த்திதான் கொடுத்தார்களாம். 


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions