சிவகார்த்திகேயனுடன் நடிக்க போட்டி போடும் இளம் கதாநாயகிகள்

Bookmark and Share

சிவகார்த்திகேயனுடன் நடிக்க போட்டி போடும் இளம் கதாநாயகிகள்

சிவகார்த்திகேயன்– கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம் ‘ரஜினி முருகன்’. பொன்ராம் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். 

இதில், சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘இது என்ன மாயம்‘‘ படம் இவருக்கு பெயர் சொல்லும் விதத்தில் அமையவில்லை. ‘ரஜினி முருகன்’ வெளியான பிறகு கீர்த்தி சுரேஷ் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கிறார். இதனால் கீர்த்தி மகிழ்ச்சியில் உள்ளார். 

இதேபோல், ஸ்ரீதிவ்யா நடித்த முதல் படம் வெளிவராமல் இருந்தது. ஆனால் சிவகார்த்திகேயனுடன் அவர் ஜோடி சேர்ந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் ஸ்ரீதிவ்யாவுக்கு பெயர் சொல்லும் பட்சமாக அமைந்தது. அதன்பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தது.

இதனால் ஸ்ரீதிவ்யா தமிழ் படஉலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். 
இதுபோல் அறிமுக நடிகைகள் சிலர் நடித்த படங்கள் வெளியாகாமல் உள்ளன. சில தமிழ் படங்கள் திரைக்கு வந்ததும் நடித்த நாயகிகள் ரசிகர்களுக்கு அடையாளம் தெரியாத நிலை தொடர்கிறது. 

சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் புதுமுக நடிகைகள் ‘மார்க்கெட்’ சூடு பிடிக்கிறது. எனவே அடுத்த வாய்ப்புக்காக காத்திருக்கும் புதுமுக நடிகைகள் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரவேண்டும் என்பதில் ஆர்வமுடன் இருப்பதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions