7 வருடங்களுக்கு சிவகார்த்திகேயன் பிசியாம்!

Bookmark and Share

7 வருடங்களுக்கு சிவகார்த்திகேயன் பிசியாம்!

மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயனுக்கு அதன்பிறகு எழில் இயக்கத்தில் நடித்த மனம் கொத்திப்பறவை ஹிட்டாக அமையவில்லை. ஆனால், கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே ஆகிய படங்களின் தொடர் ஹிட் காரணமாக தற்போது முன்னணி ஹீரோவாகி விட்டார் சிவகார்த்திகேயன்.

அதனால் இன்று வெள்ளிக்கிழமை அவர் நடிப்பில் வெளியாகும் காக்கி சட்டை படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிக்க முன்னணி நிறுவனங்களே மோதிக்கொண்டிருக்கின்றன.

அதோடு, முன்னணி இயக்குனர்களும் அவருக்கு கதை ரெடி பண்ணிவிட்டு காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தற்போது ரஜினி முருகன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனிடம் புதிதாக யாராவது கால்சீட் கேட்டு சென்றால், இன்னும் 7 வருடங்களுக்கு நான் பிசியாக இருக்கிறேன்.

சில நிறுவனங்கள் கால்சீட் வாங்கியுள்ளன. சில டைரக்டர்கள் கதை சொல்லிவிட்டு காத்திருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களின் படத்தில் நான் நடித்து முடிக்கவே அதிகபட்சம் 7 வருடங்களாவது ஆகும். அதனால் இப்போதைக்கு புதிதாக நான் கதை கேட்கும் நிலையில் இல்லை என்று கைவிரிக்கிறாராம் சிவகார்த்திகேயன்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions