சிவகார்த்திகேயனைக் கவர்ந்த கீதா மிஸ்...!

Bookmark and Share

சிவகார்த்திகேயனைக் கவர்ந்த கீதா மிஸ்...!

சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வைப் பற்றி சொல்ல வேண்டியதேயில்லை. பல வருடங்களாக டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தவர், அப்படியே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார்.

இப்போதும் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது சுவாரசியமாகப் பேசி அனைவரையும் கவர்ந்து விடுகிறார். பத்திரிகையாளர்களைச் சந்தித்தால் கூட அவரது பேச்சில் நகைச்சுவை உணர்வு மேலோங்கி நிற்கும்.

சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக ஆக்டிவ்வாக இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். அவருடன் யாராவது ஏதாவது ஒரு செய்திகளைப் பகிர்ந்து கொண்டாலும் அதில் கூட நகைச்சுவை இழையோடத்தான் பதிலளிப்பார்.

இந்த உணர்வே சிவகார்த்திகேயனுக்கு பல ரசிகர்களைப் பெற்றுத் தந்துள்ளது. அது போலவே திரையுலகில் உள்ள பலரும் சிவகார்த்திகேயனுக்கு நண்பர்களாகி, நெருக்கமாக உள்ளார்கள்.

இன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'காக்கி சட்டை' படம் வெளிவருவதால் அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 'எதிர் நீச்சல்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக  நடித்த பிரியா ஆனந்தும் நேற்று சிவகார்த்திகேயனுக்கு படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்தார்.

பதிலுக்கு சிவகார்த்திகேயனும் 'நன்றி கீதா மிஸ்' என்று தெரிவித்தார். 'எதிர் நீச்சல்' படத்தில் பிரியா ஆனந்தை 'கீதா மிஸ்' என்று சொல்லித்தான் சிவகார்த்திகேயன் அழைப்பார். அது இன்று வரை தொடர்கிறது.

'எதிர் நீச்சல்' படத்தை இயக்கிய துரை செந்தில்குமார், இசையமைத்த அனிருத், நாயகன் சிவகார்த்திகேயன் மீண்டும் 'காக்கி சட்டை' படத்தில் இணைந்துள்ளார்கள்.

ஆனால், 'கீதா மிஸ்' ஆக நடித்த பிரியா ஆனந்த் மட்டும் இந்தப் படத்தில் மிஸ்ஸிங்....இருந்தாலும் படக்குழுவினரை தாராள மனதுடன் பிரியான ஆனந்த் வாழ்த்தியுள்ளார்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions