காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்க சொல்லும் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்க சொல்லும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயனைப் பொறுத்தவரை சேனலில் இருந்தபோதே தனது வார்த்தை ஜாலத்தினால்தான் பெருவாரியான நேயர்களை கவர்ந்து வந்தார். அதனால் சினிமாவுக்கு வந்த பிறகும் காமெடி என்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

அதோடு, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களுக்குப்பிறகு நடித்த மான்கராத்தே படத்தில் சீரியசாகவும் நடித்தார்.

குறிப்பாக, வில்லனின் காலில் விழுந்தெல்லாம் நடித்தார். ஆனால் அந்த சீரியசான நடிப்பை அவரது ரசிகர்கள் லைக் பண்ணவில்லை. மாறாக, ஒரு ஹீரோ வில்லனின் காலில் விழுவதா என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனால் இப்போது ரசிகர்களின் மனதறிந்து நடிக்கத் தொடங்கியிருக்கும் சிவகார்த்திகேயன், தனது ஒவ்வொரு படங்களிலும் காமெடி தூக்கலாக இருக்க வேண்டும் என்கிறாராம்.

குறிப்பாக, டைரக்டர்கள் காமெடி சீன் வரும் இடத்தில் காமெடி சீன் என்று மட்டுமே சொல்லிவிட, அந்த இடத்தில் எந்த மாதிரியான சீன் வைக்கலாம் என்று சூரியுடன் சேர்ந்து சிவகார்த்திகேயனும் யோசித்து சீன் வைக்கிறாராம்.

அந்த வகையில், தான் ஹீரோயினியுடன் ரொமான்ஸ் பண்ணும் காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் அனைத்திலும் ஷோலோவாக வராமல் காமெடியன்களுடன் இணைந்து தான் நடிப்பது என்றும் முடிவு செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.


Post your comment





Related News
விவசாயியாக நடிக்கும் சிவகார்த்திகேயன் - இயக்குநர் தகவல்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions