பரவை முனியம்மாவை மருத்துவமனையில் சந்தித்த சிவகார்த்திகேயன்

Bookmark and Share

பரவை முனியம்மாவை மருத்துவமனையில் சந்தித்த சிவகார்த்திகேயன்

‘தூள்’ படத்தில் ‘சிங்கம் போல...’ என்ற பாடலை பாடி நடித்து பிரபலமானவர் பரவை முனியம்மா. இவர் கடைசியாக சிவகார்த்திகேயனுடன் ‘மான் கராத்தே’ படத்தில் பாட்டுபாடி நடித்தார். மேலும் டெலிவிஷனில் சமையல் நிகழ்ச்சிகளிலும் பொது விழாக்களில் நாட்டுப்புற பாடல்களையும் பாடி வந்தார்.

சமீப காலமாக பரவை முனியம்மாவுக்கு படங்கள் இல்லை. இதனால் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். வயது முதுமை காரணமாக உடல் நலக்கோளாறும் ஏற்பட்டது. மருந்து வாங்கவும் பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்தார்.

பரவை முனியம்மா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்ற சிவகார்த்திகேயன், அங்கு பரவை முனியம்மாவை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களிடம் பரவை முனியம்மாவின் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றிருக்கிறார்.

ஏற்கனவே, நடிகர் விஷால் அவருக்கான மருத்துவ செலவை ஏற்றுக்கொண்டு, மாதாமாதம் 5000 ரூபாய் வழங்கி உதவுவதாகவும் உறுதியளித்துள்ளார். அவரைத்தொடர்ந்து தனுஷும் பரவை முனியம்மாவுக்கு ரூபாய் 5 லட்சம் பண உதவியும் வழங்கியிருக்கிறார்.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
தல தளபதியை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிவகார்த்திகேயன்.!
நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்!
மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions