உஷார் பார்ட்டி சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

உஷார் பார்ட்டி சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது காக்கி சட்டை.  எதிர்நீச்சல் படத்தின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியிருக்கும் காக்கி சட்டை படத்தின் முன்னோட்டம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

யு டியூப்பில் 25 லட்சம் பேர் இந்த முன்னோட்டத்தை கண்டு ரசித்தனர்.  இந்த முன்னோட்டத்தைப் பார்த்த அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குத்தனர். விஜய் ரசிகர்களோ சிவகார்த்திகேயனை திட்டித்தீர்த்தனர்.

காரணம்... காக்கி சட்டை முன்னோட்டத்தில் தல ஸ்டைல்ல சொல்லணும்னா.... இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங் என வசனம் பேசியிருப்பார் நடிகர் சிவகார்த்திகேயன். இதனால் சிவகார்த்திகேயன் அஜித்தின் தீவிர ரசிகர் என்றொரு பேச்சு சமூக வலைதளங்களில் நிலவியது.

தன் மீது அஜித் ரசிகர் என்ற முத்திரை குத்தப்படுவதை விரும்பாத சிவகார்த்திகேயன் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெளிவுபடுத்தி உள்ளார். கட்அவுட், பாலாபிஷேகம் எல்லாம் பண்ற அளவுக்கு நான் யாரோட மிகப்பெரிய ரசிகன், வெறியன் அப்படின்னு சொல்லணும்னா அது ரஜினி சாரைத்தான் சொல்லுவேன்.

அதுக்கப்புறம் எனக்கு அஜித் சார், விஜய் சார் ரெண்டு பேரையுமே ரொம்பவும் பிடிக்கும். எந்தவிதமான பேக்ரவுண்ட்டும் இல்லாம தன்னம்பிக்கையோட அஜித் சார் ஜெயிச்சார்னா, ஒரு வாய்ப்புக் கிடைச்சா அதை எப்படி பயன்படுத்தி முன்னேறணும்னு விஜய் சார் காட்டிட்டார்.

அதோடு இவங்க ரெண்டு பேருமே இத்தனை உயரத்துக்கு வந்ததுக்கப்புறமும் நேர்ல சந்திச்சோம்னா எந்தவித பந்தாவும் இல்லாம ரொம்ப சாதாரணமா இருப்பாங்க. இதுனாலயே நான் இவங்களோடு ரசிகனா மாறிட்டேன்.

அதோடு எனக்கு இவங்க பெரிய ரோல் மாடலும் கூட. காக்கி சட்டை படத்துல அஜித் சார் டயலாக் மட்டுமில்ல... விஜய் சார் டயலாக்கும் இருக்கு!


Post your comment





Related News
அஜித்துடன் இணைந்து நடித்த சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்த சோகம்
அஜித்தின் தயாரிப்பாளரோடு சிவகார்த்திகேயன்! வெற்றிக்கூட்டணி
சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகரா?அஜித் ரசிகரா?
'தெறி' பாணியில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு கொடுத்த அஜித்
”கொஞ்சம் பார்த்து இருங்கள்” சிவகார்த்திகேயனுக்கு அறிவுரை கூறிய அஜித்!
அப்பா, அண்ணன் போல் தட்டி கொடுத்தார் அஜித்: சிவகார்த்திகேயன் உருக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions