சிவகார்த்திகேயனை வைத்து உருவான ‘ஆன்தம்’ ஆல்பம்

Bookmark and Share

சிவகார்த்திகேயனை வைத்து உருவான ‘ஆன்தம்’ ஆல்பம்

இதுவரை நடிகர்கள் தங்களது சுய விளம்பரத்திற்காக ‘ஆன்தம்’ ஆல்பத்தை உருவாக்கி வந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ‘எங்கள் வீட்டுப்பிள்ளை’ என்ற பெயரில், சிவகார்த்திகேயன் தொடர்பான ஆன்தமை உருவாக்கியுள்ளனர்.

இந்த இசை ஆல்பம் வரும் 11ம் தேதி வெளியிடப்பட உள்ளனாராம். இதை பிரகாஷ் பாஸ்கர் என்பவர் உருவாக்கியுள்ளார்.

இது குறித்து பிரகாஷ் பாஸ்கர் கூறியதாவது:

தனிப்பட்ட முறையில் நான் மிகவும் ரசித்து ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டது நடிகர் சிவகார்த்திகேயனைத் தான். அவரை வைத்து ரசிகர்களுக்காக ஒரு ஆல்பம் பண்ணலாமேன்னு எடுத்த முயற்சி தான் இது. ஹீரோவின் புகழ்பாடும் விதமாக இந்த ஆல்பம் இருக்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.

சிவகார்த்திகேயன் மூலமாக பாசிட்டிவ் உத்வேகத்தை ரசிகர்கள் மத்தியில் கொடுக்கும் விதமாக இந்த ஆல்பம் இருக்கும். ஆல்பத்தின் விஷுவல்ஸுக்கு அவர் பட ஸ்டில்ஸையே யூஸ் பண்ணியுள்ளேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions