சிவகார்த்திகேயனுக்காக ஸ்பெஷல் பாடல்! மீண்டும் அனிருத்

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்காக ஸ்பெஷல் பாடல்! மீண்டும் அனிருத்

சிவகார்த்திகேயன் இப்போது மோகன் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். இவரோடு நயன்தாராவும் நடிக்க ஏற்கனவே பொன்ராம் இயக்கத்தில் நடிப்பதை தள்ளிவைத்தார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சேரி பகுதி பையனாக நடிக்கிறாராம். இதற்காக செட் போட்டு ஷூட்டிங் எடுத்துள்ளார்கள். சில காட்சிகளை குடிசைப்பகுதிகளிலும் எடுத்துள்ளார்கள்.

தற்போது இப்படத்தில் இதற்காகவே ஒரு செம குத்து பாடல் ஒன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார்.

ஏற்கனவே சிவா நடித்த மான் கராத்தே படத்தில் ராயபுரம் பீட்டர் என்னும் பாடலை அனிருத் கொடுத்திருந்தார். இப்போது மீண்டும் அதுபோல ஒரு பாடல் ரசிகர்களுக்காக காத்திருக்கிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions