சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் அனிருத்!

Bookmark and Share

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் அனிருத்!

‘ரஜினி முருகன்’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது ‘ரெமோ’ படத்தில் நடித்து வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இப்படத்தை அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது அனிருத் இசையமைக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் படங்களான ‘எதிர்நீச்சல்’, ‘மான் கராத்தே’, ‘காக்கி சட்டை’, ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். தற்போது உருவாகி வரும் ‘ரெமோ’ படத்திற்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அதுபோல், புதுபடமும் எதிர்பார்க்கப்படுகிறது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions