சிவகார்த்திகேயனுக்கே சான்ஸ் கேட்டேன், இத்தனை கஷ்டத்தை கடந்தாரா பாலாஜி- நெகிழ்ச்சி சம்பவங்கள்

Bookmark and Share

சிவகார்த்திகேயனுக்கே சான்ஸ் கேட்டேன், இத்தனை கஷ்டத்தை கடந்தாரா பாலாஜி- நெகிழ்ச்சி சம்பவங்கள்

பாலாஜி என்றால் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், கனா கானும் காலங்கள் ஜோ என்றால் எல்லோருக்கும் தெரியும்.

பாலாஜி கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கு பிறகு நகர்வலம் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகியுள்ளார். இவர் சமீபத்தில் ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பல நெகிழ்ச்சியான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ‘நான் சிவகார்த்திகேயனுக்கு முன்பே சினிமாவில் காலடி எடுத்து வைத்துவிட்டேன், காதல் சொல்ல வந்தேன் நடித்த போது சிவகார்த்திகேயன் ஒரு முறை படப்பிடிப்பிற்கு யதார்த்தமாக வந்தார்.

அப்போது அவர் “சார் இந்த படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் இருக்கின்றதா?” என கேட்க, நான் அவருக்காக இயக்குனரிடம் சான்ஸ் கேட்டேன்.

ஆனால், அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் முடிவாகிவிட்டது, இதனால், இனி கமிட் செய்ய முடியாது என்று கூறினார்கள், அவரும் பெருந்தன்மையாக ‘பரவாயில்லை சார் நீங்க கேட்டதே போதும்” என்றார். மேலும், நான் நடித்த பட்டாளம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியது சிவகார்த்திகேயன் தான், சின்னத்திரைக்கு வெளியே அது தான் அவரின் முதல் மேடை தொகுப்பாளராக.

மேலும், இந்த 7 வருடத்தில் பல கடைகளில் வேலைக்கு சென்றேன், ஒருவர் கூட வேலைக்கு சேர்க்கவில்லை, நீ சினிமாக்காரன் என ஒதுக்கினார்கள், வாழ்க்கையின் அனைத்து ஏற்ற, தாழ்வுகளையும் இந்த ஒரு சில வருடங்களில் பார்த்துவிட்டேன்’ என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions