யப்பா... அண்ணன் தம்பியா சந்தோஷமாக இருக்கோம் - சிவ கார்த்திகேயனுடனான மோதல் குறித்து தனுஷ்

Bookmark and Share

யப்பா... அண்ணன் தம்பியா சந்தோஷமாக இருக்கோம் - சிவ கார்த்திகேயனுடனான மோதல் குறித்து தனுஷ்

சம்பந்தப்பட்ட சிவ கார்த்திகேயன், எனக்கும் தனுஷுக்கும் இடையில் எந்த சண்டையும் இல்லை என்று மேடைக்கு மேடை சொன்னாலும் யாரும் நம்பத் தயாராக இல்லை. அதை அவர் - தனுஷ் - சொல்லட்டும் என்று காத்திருந்தனர். இப்போது தனுஷே எங்களுக்குள் எதுவும் இல்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில், காக்கி சட்டையின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சிவ கார்த்திகேயன் கலந்து கொண்டார். அப்போது போனில் அவரிடம் பேசினார் தனுஷ்.  

வழக்கமான கேள்விகளெல்லாம் கேட்டுட்டாங்களா என்று ஜாலியாக பேசத் தொடங்கியவர், யப்பா... அண்ணன், தம்பியா சந்தோஷமா இருக்கோம். நீங்களா ஏதாவது பேசி கெடுத்திடாதீங்க என்றார். மேலும், 3 படத்திலிருந்தே சிவ கார்த்திகேயனின் நடிப்பு எனக்குப் பிடிக்கும்.

அதனால்தான் அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். எல்லோரும் ஆச்சரியப்படுகிற அளவில் அவரோட வளர்ச்சி இருக்கு. இனியும் அப்படிதான் இருக்கும் என்றார். ஆக, எங்களுக்குள் சண்டையில்லை என்று இருவருமே கூறிவிட்டனர். இனியாவது மீடியா சும்மா இருக்குமா பார்ப்போம்.


Post your comment





Related News
தனுஷுக்கு போட்டியாக களமிறங்குகிறாரா சிவகார்த்திகேயன்
அனிருத்தை ஒதுக்கும் தனுஷ் குடும்பம்..? சிவகார்த்திகேயன் ஆதரவு
சிவகார்த்திகேயன், தனுஷின் ரகசிய உரையாடல் லீக்கானது – வீடியோ உள்ளே!
சிவகார்த்திகேயன் எனக்கு நல்ல நண்பர் - தனுஷ் ஓபன் டாக்
தனுஷை மிஞ்சிய சிவகார்த்திகேயன்...! ஆச்சரியம்... ஆனால், உண்மை...!!
பொங்கல் ரேசில் களமிறங்கிய காக்கிச்சட்டை
சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கியதாக வதந்தி...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions