சிவகார்த்திகேயன் எனக்கு நல்ல நண்பர் - தனுஷ் ஓபன் டாக்

Bookmark and Share

சிவகார்த்திகேயன் எனக்கு நல்ல நண்பர் - தனுஷ் ஓபன் டாக்

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘தங்கமகன்’ படத்தை பற்றி தனுஷ் கூறுகையில், ‘தங்கமகன்’ குடும்ப பொழுதுபோக்கு படம். எனக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். எமி ஜாக்சன் காதலியாகவும், சமந்தா மனைவியாகவும் நடித்திருக்கிறார்கள். இரண்டு பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

எனக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கிறார். ஒரு பெரிய இயக்குனர் என்று பார்க்காமல் அனுபவம் வாய்ந்த நடிகராக நடித்திருக்கிறார்.

சிறந்த அம்மாவாக ராதிகா நடித்திருக்கிறார். வேல் இயக்கத்தில் ஏற்கனவே ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற வெற்றி படத்தை கொடுத்திருக்கிறோம். அதே கூட்டணி இணைந்திருப்பதால் இந்தப் படமும் வெற்றி பெறும்’ என்றார்.

மேலும் அவரிடம் சிவகார்த்திகேயனுடன் பிரச்சனை? அதனால்தான் விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு கொடுக்கிறீர்களா? என்று கேட்டபோது “சிவகாத்திகேயனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் நல்ல நண்பர்கள்.

நான் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், வுண்டர்பார் நிறுவனத்தால் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அதனால்தான் அவரை வைத்து படம் தயாரிக்கவில்லை. சிவகார்த்திகேயன் சிறப்பாக வளர்ந்திருப்பது பெருமையாக கருதுகிறேன்” என்றார்.


Post your comment





Related News
தனுஷுக்கு போட்டியாக களமிறங்குகிறாரா சிவகார்த்திகேயன்
அனிருத்தை ஒதுக்கும் தனுஷ் குடும்பம்..? சிவகார்த்திகேயன் ஆதரவு
சிவகார்த்திகேயன், தனுஷின் ரகசிய உரையாடல் லீக்கானது – வீடியோ உள்ளே!
யப்பா... அண்ணன் தம்பியா சந்தோஷமாக இருக்கோம் - சிவ கார்த்திகேயனுடனான மோதல் குறித்து தனுஷ்
தனுஷை மிஞ்சிய சிவகார்த்திகேயன்...! ஆச்சரியம்... ஆனால், உண்மை...!!
பொங்கல் ரேசில் களமிறங்கிய காக்கிச்சட்டை
சிவகார்த்திகேயன் விபத்தில் சிக்கியதாக வதந்தி...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions