என்னை நிராகரித்த ஹீரோயின்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

Bookmark and Share

என்னை நிராகரித்த ஹீரோயின்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

ஆரம்ப காலத்தில் என்னை நிறைய ஹீரோயின்கள் நிராகரித்தார்கள் என்று வெளிப்படையாக கூறினார் சிவகார்த்திகேயன். அண்மையில் நடந்த ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறுகிறவர்களுக்கு ஹீரோயின்கள் கிடைப்பது ரொம்ப கஷ்டம். ஆரம்ப காலத்தில் என்னோடு நடிக்க மறுத்து, நிராகரித்த ஹீரோயின்கள் நிறைய இருக்கிறார்கள்.

பெரிய மனசு பண்ணி மான் கராத்தே படத்தில் ஹன்சிகா என்னுடன் நடிக்க ஒப்புக் கொண்டபோது. என்ன ஹன்சிகா அவனோட நடிக்கப்போகுதா. அதுக்கு என்ன பைத்தியமா? ஏதாவது நல்ல டாக்டரா பார்க்க சொல்லுங்க" என்று கிண்டல் செய்தார்கள்.

இதுக்காக ஹீரோயின் இல்லாத கதையிலா நடிக்க முடியும். நான் ஏதாவது செய்து மக்களை சிரிக்க வைக்கிறேன் என்றால் அது நானாக செய்தது இல்லை. எனக்கு முன்னோடிகளாக இருக்கும் காமெடியன்களின் காமெடி காட்சிகளை பார்த்து அதை எனக்குள் திணித்து வைத்திருக்கிறேன்.

அதுதான் வெளியே வருகிறது. சில காமெடிகளை அப்படியே காப்பியும் அடித்திருக்கிறேன். இப்போது குடும்பத்தோடு பார்க்கிற படங்கள் குறைந்து விட்டது. அந்த மாதிரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். என்றார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions