புது வீட்டில் குடியேறிய சிவகார்த்திகேயன்

Bookmark and Share

புது வீட்டில் குடியேறிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். சின்னத்திரை தொகுப்பாளராக அறிமுகமாகி, ‘மெரினா’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர். தொடர்ந்து, நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த சிவகார்த்திகேயன், இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய நாயகனாக தமிழ் சினிமாவில் வலம்வருகிறார்.

இவருடைய புகழ் உயர்ந்த நிலையில், இவரது சம்பளமும் தமிழ் சினிமாவில் கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போது இவர் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வரை சம்பளமாக கேட்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. திருச்சியை சொந்த ஊராக கொண்ட சிவகார்த்திகேயன், சென்னை கே.கே.நகரில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி வந்தார்.

இந்நிலையில், இன்று இந்த வீட்டில் கிரகபிரவேசம் செய்து குடிபுகுந்தார். இந்த கிரகபிரவேச விழாவிற்கு சிவகார்த்திகேயனின் சொந்தக்காரர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் இருந்து ஒரு சில நண்பர்களுக்கே அழைப்பு விடுத்திருந்தார். இவர் புது வீடு குடியேறிய விஷயம் தெரிந்ததும், அவருக்கு ஏராளமான நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions