தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்

Bookmark and Share

தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்

தமிழில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். பிறகு தனது நகைச்சுவையான நடிப்பால் பல ரசிகர்களின் அன்புக்கு சொந்தக்காரர் ஆனார். அவர் நடிப்பையும் தாண்டி படங்களை தயாரிக்கவும் செய்கிறார்.

இப்போது அவரது கலை ஆர்வம் பாடல் எழுதுவது வரை வந்துள்ளது. நயன்தாரா நடிப்பில் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் அனிருத் இசையமைத்திருந்த கல்யாண வயசு பாடலை எழுதியிருந்தார்.

இது மிக பிரபலமடைந்துள்ள நிலையில் இந்த பாடலை எழுதியதற்காக தரப்பட்ட சம்பளத்தை தனது ஆரம்ப படமான மெரினாவுக்கு 3 பாடல்களை எழுதியிருந்த மறைந்த பிரபல பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்களின் குடும்பத்துக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். இது சிவகார்த்திகேயனை பற்றிய நல்ல கண்ணோட்டத்தை மேலும் கூட்டியுள்ளது.


Post your comment





Related News
வல்லதேசம் இசையமைப்பாளரின் இசை ஆல்பத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு
‘மேல்நாட்டு மருமகன்’ படத்துக்காக 33 நிமிடத்தில் பாட்டெழுதி தந்த நா.முத்துக்குமார்
எங்களை கஷ்டப்படுத்தாதீர்கள் – நா.முத்துக்குமாரின் சகோதரர் உருக்கமான கடிதம்!
நா.முத்துக்குமார் குறித்து உருக்கமாக பேசிய சூர்யா!
மரணத்திற்கு முன் மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதிய உருக்கமான கடிதம்!
2015-ஆம் ஆண்டில் 33 படங்களில் 94 பாடல்கள் நா.முத்துக்குமார் சாதனை
சர்வதேச எழுத்தாளர்கள் திருவிழாவில் நா.முத்துக்குமார்..!
நா.முத்துக்குமாரின் 16 ஆண்டு கால தவம்!
மலேசிய கலைஞர்களின் முத்துக்குமார் வாண்டட்
இரண்டாவது முறையாக தேசிய விருது : நா.முத்துக்குமார் மகிழ்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions