மக்களின் எதிர்பார்ப்பு மாறிவிட்டது: சிவகார்த்திகேயன்

Bookmark and Share

மக்களின் எதிர்பார்ப்பு மாறிவிட்டது: சிவகார்த்திகேயன்

விவேக் ஹீரோவாக நடிக்கும் படம், ‘பாலக்காட்டு மாதவன்’. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாடல்களை வெளியிட்டு சிவகார்த்திகேயன் பேசியதாவது:சிறு வயதிலிருந்தே நான் விவேக்கின் ரசிகன்.

காமெடி மூலம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். மூட நம்பிக்கை இல்லாதவனாக இருப்பதற்கு காரணம் விவேக்தான். எனக்கென்று தனி காமெடி திறன் எதுவும் கிடையாது.

என்னாலும் சிரிக்க வைக்க முடிகிறது என்றால் விவேக், கவுண்டமணி போன்ற காமெடி ஜாம்பவான்களை எனக்குள் போட்டு வைத்திருக்கிறேன். அதன் வெளிப்பாடுதான் எனது காமெடிகள்.

இப்போது குடும்பத்தோடு பார்க்கும்படியான படங்கள் வருவது குறைந்து விட்டது. பாலக்காட்டு மாதவன் குடும்பத்தோடு பார்க்கும் படமாக இருக்கும். மக்கள் தியேட்டருக்கு வருவதில்லை, மாறிவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். அப்படியல்ல. சினிமாவில், மக்களின் எதிர்பார்ப்பு மாறி இருக்கிறது. அதற்கேற்ப சினிமாவும் மாற வேண்டும்.இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

கலைப்புலி எஸ்.தாணு, படத்தின் தயாரிப்பாளர்கள் லாரன்ஸ், சஜீவ், இயக்குனர் சந்திரமோகன், நடிகைகள் சோனியா அகர்வால், ஷீலா, ஆர்த்தி, இசை அமைப்பாளர்கள் அனிருத், ஸ்ரீகாந்த் தேவா உள்பட பலர் கலந்து கொண்டனர். 


Post your comment





Related News
12 வருடத்திற்குப் பிறகு மீண்டும் மாதவனுடன் இணையும் பிரபல நடிகை
யுவன் பாடலை வெளியிடும் மாதவன்
மீண்டும் மாதவனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
சர்வதேச காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற மாதவனின் மகன்.!
காயம் காரணமாக மாதவனுக்கு மேலுமொரு சோகம்
பிரபல நடிகர் மாதவனுக்கு திடீர் அறுவை சிகிக்சை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
கனடா பிரதமரை சந்தித்த முன்னணி தமிழ் நடிகர் - வைரலாகும் புகைப்படம்.!
மாதவனுக்காக இப்படியொரு கொடுமை - கலங்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
படங்களுக்கு டாடா சொல்லி சீரியலுக்கு தாவிய மாதவன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions