ரஜினிமுருகன் படம் ரிலீஸூக்கு 5 கோடி கொடுத்து உதவிய சிவகார்த்திகேயன்?

Bookmark and Share

ரஜினிமுருகன் படம் ரிலீஸூக்கு 5 கோடி கொடுத்து உதவிய சிவகார்த்திகேயன்?

இயக்குநர் லிங்குசாமியின் தயாரிப்பில் பொன்ராம் இயக்க சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் படம் தயாராகிச் சில மாதங்கள் ஆகிவிட்டன. படத்தைத் தயாரித்த திருப்பதிபிரதர்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கல் காரணமாக அந்தப்பட வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டிருந்தது.

இப்போது ஜனவரி14 பொங்கல்நாளில் படம் வெளியாகிவிடும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே இரண்டுக்கும் மேற்பட்ட வெளியீட்டுத்தேதிகள் சொல்லப்பட்டு அப்போதெல்லாம் படம் வெளியாகாததால் இந்தத் தேதியிலாவது வந்துவிடுமா? என்கிற சந்தேகம் இருந்ததாம்.

ஆனால், இம்முறை படம் உறுதியாக வெளியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் தயாரிப்புநிறுவனத்துக்கு இருந்த சிக்கல்கள் எல்லாம் சரிசெய்யப்பட்டுவிட்டன என்று சொல்லப்படுகிறது. 

ஒன்றைச் சரிசெய்தால் இன்னொன்று வரும் என்பதற்கேற்ப பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுவந்த தயாரிப்பாளர்களின் சிக்கலைத் தீர்க்க உதவி செய்ய சிவகார்த்திகேயன் முன்வந்தார் என்று சொல்லப்பட்டது. 

இதற்காக அவர் ஐந்துகோடி கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மிச்சம்மீதி இருந்த சிக்கல்களும் தீர்க்கப்பட்டு கண்டிப்பாக படம் வெளியாகிவிடும் என்று சொல்கிறார்கள்.


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
இந்தியிலும் கலக்கும் இருமுகன்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்
தனுஷின் பவர்பாண்டி எப்படி இருக்கு- தேசிய விருது பட இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions