உற்சாகத்தில் சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

உற்சாகத்தில் சிவகார்த்திகேயன்!

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என விஜயசேதுபதி தொடர்ந்து ஹிட் கொடுத்தது போன்று சிவகார்த்திகேயனும், எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே என சில சூப்பர் ஹிட்களை கொடுத்து வந்தார்.

அதனால் கமர்சியல்ரீதியாக ஒரு பெரிய இடத்தை பிடித்து விட்டார் சிவகார்த்திகேயன். அதன்காரணமாக அவர் நடித்து வந்த காக்கி சட்டை படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானது.

ஆனால், முந்தைய படங்களைப்போன்று அவரது ரசிகர்களுக்கு அந்த படம் முழுதிருப்தியை கொடுக்கவில்லை. என்றபோதும் வசூல்ரீதியாக பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்கிறார்கள்.

அதனால், தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ரஜினிமுருகன் படத்துக்கு வழக்கம்போலவே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதோடு, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிட முன்வந்திருக்கிறது.

அதோடு, அப்படத்தின் சேனல் உரிமைக்கும் பலத்த போட்டி ஏற்பட இப்போது ஜீ டி.வி ரஜினிமுருகன் படத்தின் சார்ட்டிலைட் உரிமையை பெற்றிருக்கிறது. அதுவும் இதுவரை வெளியான சிவகார்த்கேயன் படங்களை விட அதிக தொகைக்கு வாங்கியிருக்கிறார்கள். இதனால் வழக்கத்தை விட அதிக உற்சாகத்தில் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
இந்தியிலும் கலக்கும் இருமுகன்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்
தனுஷின் பவர்பாண்டி எப்படி இருக்கு- தேசிய விருது பட இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions