டீக்கடை முதலாளியான சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

டீக்கடை முதலாளியான சிவகார்த்திகேயன்!

ரஜினி முருகன் என்ற டைட்டிலே அந்த படத்தில் சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகராக நடிக்கிறார் என்பதை உணர்த்தி விட்டது. அதோடு, இப்போது வெளியாகியுள்ள அப்படத்தின் புகைப்படங்கள், ரஜினி கெட்டப்பிலேயே சிவகார்த்திகேயன் பல காட்சிகளில் தோன்றி நடித்திருக்கிறார் என்பதையும் உணர்த்தி வருகிறது.

இந்நிலையில், ரஜினி முருகன் படத்தில் ரஜினி முருகன் டீஸ்டால் என்றொரு டீக்கடை நடத்துபவராக சிவகார்த்திகேயன் நடித்திருப்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.

அதோடு, ரஜினிகாந்த் பிறந்த நாளில் தனது ஹோட்டலில் சாப்பிட வருபவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று இலவசமாகவே உணவளிக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

இதற்கெல்லாம் மேலாக, அவரது என்ட்ரி தொடங்கி பல காட்சிகளில் ரஜினி கெட்டப்பிலேயே தன்னை வெளிப்படுத்தி அவரது சாயல் நடிப்பையும் அவ்வப்போது வெளிப்படுத்தும் சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியுடன் செய்த காமெடி கலாட்டாவைப் போன்று இந்த படத்தில் ரசிகர்களின் வயிற்றை பதம்பார்க்கும் பல காமெடி காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம்.

ஆக, ரஜினி முருகன், ரசிகர்களை நூறு சதவிகிதம் திருப்திபடுத்தும் கதையம்சத்தில் தயாராகி உள்ளதாம். 

 


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
இந்தியிலும் கலக்கும் இருமுகன்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார் பிரணாப் முகர்ஜி: ராஜூ முருகன், வைரமுத்து விருதுகளை பெற்றனர்
தனுஷின் பவர்பாண்டி எப்படி இருக்கு- தேசிய விருது பட இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions