சிவாவை தொடர்ந்து அருண்விஜய்! ரஜினியால் டென்ஸன்

Bookmark and Share

சிவாவை தொடர்ந்து அருண்விஜய்! ரஜினியால் டென்ஸன்

நடிகர் அருண் விஜய் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்ததை மறந்திருக்க மாட்டீர்கள். அந்த படத்தில் சிறப்பாக நடித்து அஜித்திடம் பாராட்டை வாங்கினார். அதுபோல அவர் இப்போது நடித்துள்ள குற்றம் 23 படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

கடந்த மார்ச் 3ல் வெளியான இப்படத்திற்கு கொஞ்சம் அதிகமாகவே வசூல் இருந்தது. நடிகர் ரஜினிகாந்தை நேற்று இப்படத்தை தியேட்டரில் பார்த்துக்கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

இதனால் அவர் என்ன சொல்வாரோ என கொஞ்சம் டென்ஸனான அருண் விஜய் ரஜினியிடமிருந்து போன் வந்ததும் அதிர்ந்து போயுள்ளார். மேலும் நடிப்புக்காக பாராட்டை வாங்கியுள்ளார். நீங்கள் சாதித்துவிட்டீர்கள் எனவும் ரஜினி கமெண்ட் கொடுத்துள்ளார்.

கடைசியாக சிவகார்த்திகேயன் இது போல தனது ரெமோ படத்திற்காக ரஜினியிடம் போன் மூலம் பாராட்டை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions