சிவகார்த்திகேயனை டென்ஷனாக்கிய காமெடி நடிகர்

Bookmark and Share

சிவகார்த்திகேயனை டென்ஷனாக்கிய காமெடி நடிகர்

கமல்ஹாசனின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ரேஞ்ச் ரோவர் எஸ்யூவி ரக சொகுசு கார் ஒன்றை புதிதாக வாங்கியிருக்கிறார்.  இந்த விஷயத்தை அவரே சந்தோஷமாக ட்விட்டரில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டார்.  

ஸ்ருதிஹாசன் வாங்கியிருக்கும் புதிய காரின் விலை என்ன தெரியுமா? கிட்டத்தட்ட 50 லட்ச ரூபாய். ஸ்ருதிஹாசன் இப்படி என்றால், சிவகார்த்திகேயன் இவருக்கு நேர் மாறாக இருக்கிறார்.  சென்னை வளசரவாக்கத்திலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இதுவரை வசித்துவந்தார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் கிழக்குக்கடற்கரைசாலையில் சென்னையை ஒட்டி உள்ள பனையூர் என்ற ஊரில் ஐந்து கிரவுண்ட் நிலம் வாங்கி மிகப்பெரிய பங்களா கட்டி இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் கட்டியுள்ள புதிய வீட்டின் கிரஹப்பிரவேசம் நேற்று நடந்தது.

காமெடி நடிகர் சதீஷ் உட்பட வெகு சிலருக்கு மட்டுமே இந்த விஷயத்தைத் தெரிவித்த சிவகார்த்திகேயன் அவர்களை மட்டுமே கிரஹப்பிரவேசத்துக்கு அழைத்திருக்கிறார்.

நல்ல நாள் என்பதால் கிரஹப்பிரவேசத்தை நடத்திவிட்டாலும்  இன்னும் வீட்டு வேலைகள் பாக்கி இருக்கிறதாம். வேலைகள் முடிவடைந்த பிறகு விரைவில் புதிய வீட்டில் குடியேறவிருக்கிறார்.

தான் புதுவீட்டில் குடியேறுவது மீடியாவுக்கு தெரியக்கூடாது என்று ரகசியம் காத்து வந்தார் சிவகார்த்திகேயன். ஆனால் கிரஹப்பிரவேசத்தில் கலந்துகொண்ட அவரது நண்பரான  காமெடி நடிகர் சதீஷ் இதுகுறித்த புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுவிட்டார். இதை அறிந்து அவரை கோபித்துக் கொண்டாராம் சிவகார்த்திகேயன்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions