அடிமேல் அடியால் சோகத்தில் மூழ்கிய சிவகார்த்திகேயன்

Bookmark and Share

அடிமேல் அடியால் சோகத்தில் மூழ்கிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் எதிர்நீச்சல் முக்கிய பங்களித்துள்ளது. அதற்கு பிறகு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் அவரது மார்க்கெட்டையே புரட்டிப்போட்டது.

அதனால் சிவகார்த்திகேயனின் கால்சீட்டுக்காக மெகா பட நிறுவனங்களே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதோடு, மார்க்கெட்டில் அவர் வேகமாக வளர்ந்து வந்ததால் முன்வரிசையில் இருக்கும் சில ஹீரோக்களுக்கு, சிவகார்த்திகேயன் தங்களுக்கு போட்டியாக வந்து விடுவாரோ என்ற அச்சமும் ஏற்பட்டது.

இந்நிலையில் சிவா, பொன்ராம் இயக்கத்தில் ரஜினிமுருகன் படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். இந்த படம் தன்னை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்த்தார். ஆனால் அந்த படம் தற்போது திரைக்கு வரமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.

தற்போது திரைக்கு வர முடியாமல் கிடக்கும் பூலோகம், விஸ்வரூபம்-2, மதகஜராஜா உள்ளிட்ட சில படங்களை சுட்டிக்காட்டி, அந்த பட்டியலில் ரஜினிமுருகனையும் இணைத்து பேசுகிறார்களாம்.

ஏற்கனவே மதுரை சம்பவத்தால் மனதளவில் கலவரத்தில் இருந்து வரும் சிவகார்த்திகேயன், இப்படி அடி மேல் அடி விழுவதைப்பார்த்து மிகுந்த கவலையில் இருக்கிறாராம்.


Post your comment





Related News
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
மீ டூ.. அஜித் அப்போ சொன்னது இப்போ பலிச்சிடுச்சு!
பிரமாண்டத்தால் பிரமிக்க வைத்துவிட்டனர்: 2.0 படத்துக்கு பிரபலங்கள் பாராட்டு
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
26 சர்வதேச விருதுகளை வென்ற டூ லெட் திரைப்படம்
21 குண்டுகள் முழங்க நடிகர் அம்பரீஷ் உடல் தகனம் செய்யப்பட்டது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions