சிவகார்த்திகேயனோடு போட்டிபோடும் சூர்யா!

Bookmark and Share

சிவகார்த்திகேயனோடு போட்டிபோடும் சூர்யா!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தற்போதுவரை இந்த டீசரை 7.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

இதைதொடர்ந்து படம் வரும் டிசம்பர் 16-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் வரும் 27-ம் தேதியன்று வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கில் இப்படத்தின் பாடல்கள் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.

சில காரணங்களால் தமிழில் இதன் இசை வெளியீட்டு விழாவை நடத்தாத படக்குழு தெலுங்கில் மட்டும் பிரம்மாண்டமாக இசை விழா நடத்த திட்டமிட்டுள்ளார்கள். சமீபத்தில் நடைபெற்ற ரெமோ விழாவை விட இவ்விழாவை பிரம்மாண்டமாக நடத்தவேண்டும் என படக்குழு எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறதாம்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions