சூர்யா படத்திற்கு வழக்கு... பின்னணியில் சிவகார்த்திகேயன் படம்

Bookmark and Share

சூர்யா படத்திற்கு வழக்கு... பின்னணியில் சிவகார்த்திகேயன் படம்

மாஸ் படத்தை அடுத்து சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க-2 படத்தில் நடித்துள்ளார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. தயாரிப்பாளர் மதுராஜ் பசங்க-2 படத்தின் மீது வழக்கு தொடரவுள்ளாராம். 

காரணம் இவர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய மெரீனா படம் தானாம். இப்பட ரிலீஸின் போது, இப்படத்தின் மலையாள தியேட்டர் உரிமையை மதுராஜிற்கு தருவதாக கூறி அவரிடமிருந்து ரூ 2.50 லட்சம் பணத்தை பெற்றாராம், பாண்டிராஜ்.

ஆனால் கடைசி வரை மலையாள தியேட்டர் உரிமையை கொடுக்கவே இல்லையாம். இதனால் மதுராஜ், பணத்தையாவது திரும்பக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் பாண்டிராஜ் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக பணத்தைத் தராமல் இழுத்தடிக்கிறாராம்.

அதனால் தனக்கு முழுப் பணத்தையும் வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் வரை பசங்க 2 படத்தை வெளியிடத் தடைகேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளாராம், மதுராஜ்.

இப்படத்தை சூர்யா தயாரித்தாலும் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் பாண்டிராஜ் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions