டிவி ஷோ பிரபலம் சினேகாஸ்ரீக்கு பின்னால் சோக களம்! சிவகார்த்திகேயன் பாராட்டு

Bookmark and Share

டிவி ஷோ பிரபலம் சினேகாஸ்ரீக்கு பின்னால் சோக களம்! சிவகார்த்திகேயன் பாராட்டு

இப்போதெல்லாம் குழந்தைகள் முதல் இளையவர்கள் வரை தங்கள் திறமைகளை காட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வந்துவிட்டது. மீடியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பார்ப்போரின் கவனத்தை தன் பக்கம் கட்டிப்போட்டு விடுகிறது.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிக்கொண்டிருப்பவர் சினேகா ஸ்ரீ. இவரின் முதல் ஆரம்பமே அரட்டை அரங்கம் நிகழ்ச்சி மூலம் தான். பல முன்ணனி டிவி ஷோக்களில் கலந்து கொண்ட இவர் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் 13 வது எபிசோட் வரை சென்றார்.

இவரது அப்பா சௌந்தர் ராஜன் கூலி தொழிலாளி. அம்மா பள்ளிக்கூடத்தில் பார்ட் டைம் ஓவிய டீச்சர். சாதாரண குடும்பத்தை சேர்ந்த சினேகா 8 வயது முதல் கோவில் நிகழ்ச்சிகள், மேடை பேச்சுகள் என ஆரம்பித்து விட்டாராம்.

முதலில் அவருக்கு கிடைத்த சம்பளம் வெறும் ரூ.150 தானாம். இது போல கிடைக்கும் பணத்தை வைத்து கொண்டு தான் டி.வி ஷோக்களுக்கு வந்து போவாராம்.

சிறு வயதிலேயே படிப்பு செலவுகளை தானே கவனித்து கொள்கிறாராம் சினேகா. மேலும் இவரது திறமையை பார்த்த சினிமாவை சேர்ந்த பாலா என்பவர் சினேகாவுக்கு டிவி ஷோவில் கலந்துகொள்ள கான்செப்ட், ஸ்க்ரிப்ட் உதவி செய்கிறாராம்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு முறை சிவகார்த்திகேயனிடம் பாராட்டுக்களை வாங்கியிருக்கிறார். மேலும் அந்த சிறுமிக்கு பெரிய பரதநாட்டிய நடன கலைஞர் ஆகவேண்டும் என்பது தான் ஆசையாம்.


Post your comment

Related News
பாகுபலி-2 முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா? அனைத்து சாதனைகளும் முறியடிப்பு
முதல் நாளில் 40 கோடி வசூலித்து கபாலி சாதனை!
நைட் ஷோ “ஒரு நாள் இரவில்” ஆக மாற காரணம்?
இறுதிகட்டத்தில் நயன்தாராவின் நைட் ஷோ
வெளியாகும் நயன்தாராவின் நைட் ஷோ
நரேந்திர மோடிக்காக மும்பையில்: கோச்சடையான் \"ஸ்பெஷல் பிரிமியர் ஷோ\"..!
இசை மழைக்கு தயாராகிறது மதுரை தமுக்கம்..!
பொங்கல் விடுமுறைக்கு கூடுதல் காட்சிகளுக்கு அரசு அனுமதி..!
ச‌ல்மான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நானா? - ஹன்சிகா அதிர்ச்சி.
உலக நாயகன் கமலுக்காக காத்திருக்கும் ரஜினியின் கோச்சடையான்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions